தமிழ்த்துறை, மாணவர் பேரவை, நூலகத்துறை மற்றும் திருச்சி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்

புத்தகத் திருவிழா - 24-02-2026 to 26-02-2026

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியின் தமிழ்த்துறை, மாணவர் பேரவை, நூலகத்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா மூக்கப்பிள்ளை கலையரங்கத்தில் 24.02.2026 செவ்வாய்கிழமை காலை 11.00 மணிக்குத் தொடங்கி வைக்கப்பட்டது.

கல்லூரித் தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் அரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் தம் உரையில், மாணவர்கள் பாட நூல்களைத் தாண்டி படிக்கவேண்டிய தேவைகள் அதிகமாக உள்ளன. அதற்கேற்ற நூல்களும் அதிகமாக உள்ளன என்பதை உணர்த்தவே இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மனப்பாட முறையில் அல்லாமல் செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் அறிவைப் பெருக்கிக்கொள்ளவும் நூல்களைப் படிக்கிற அர்வத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு மாணவர் நாளொன்றுக்கு மூன்று நூல்களைப் பயின்றால் கல்லூரியில் படிக்கும் மூன்றாண்டு காலத்தில் எவ்வளவு நூல்களை பயில முடியும் என்று சிந்துத்துப் பாருங்கள். தான் உறங்கும் நேரத்திலிருந்தே படிக்கும் நேரத்தைத் திருடிக்கொள்வதாகத் தெரிவித்த பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களும் ஒரு நூலைப் படித்து முடிப்பதற்காக தன் உயிர்காக்க நடக்க இருந்த அறுவை சிகிச்சையையே ஒரு நாள் தள்ளி வைக்கக் கோரிய பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். படிப்பவர்கள் அனைவரும் தலைவராவதில்லை. ஆனால் தலைவர்கள் பெரும்பாலும் படித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். எதிர்காலத் தலைவர் ஆகப்போகிற நீங்கள் நிறைய படிக்கவேண்டும். அதற்கு இத்தகைய புத்தகத் திருவிழாக்கள் உதவட்டும் என்று தெரிவித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சோம.இராசேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் து. மகேஸ்வரி நன்றி கூறினார். சுயநிதிபிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் மாணவர் பேரவைச் செயலர் மூவேந்தன் அகல்யா மற்றும் திருச்சி, நியுசெஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் திரு. சு.முரளிதரன் அவர்கள் புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நூலகத்துறையினர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர். புத்தகத் திருவிழா 26.02.2026 வரை நடைபெறுகின்றது.



Follow US For More Photos :   Faceook Instagram     For More Photos

Click on Image to View in Large Size
×


Get In Touch

Nehru Memorial College (Autonomous)

College Road, Puthanampatti, Trichy Dt.,

Email : nmcfrontoffice@gmail.com

+91 98429 56720

Newsletter

Annual News Letter

Follow Us