PG and Research Department of Tamil (Aided Stream)
"அரசுப் பணித் தேர்வுகளும் பணித்தேர்வுத் தமிழும் ஒரு நாள் பயிலரங்கம் "

நேரு நினைவுக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில், “அரசுப் பணித் தேர்வுகளும் பணித்தேர்வுத் தமிழும்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் ஐ.சி.டி அரங்கம் - 1ல் 28.01.2026 புதன்கிழமை காலை 10.00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரிச் செயலர் பொன்.இரவிச்சந்திரன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார் அவர்தம் உரையில், அயல் மாநிலங்களிருந்து தமிழ் நாட்டில் வந்து பல்லாயிரக்கணக்கில் பணியாற்றுவதைப் பார்க்கிறீர்கள் இன்றைக்கு தமிழ்நாட்டில் பயில்பவர் வேலைவாய்ப்பு பெறவேண்டும் என்ற நோக்கில் அரசுப்பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவற்றை உணர்ந்து மாணவர்கள் பணித்தேர்வுகளை எழுத முயலவேண்டும். உங்களுக்கு இங்குக் கிடைக்கிற வாய்ப்புகளைத் தவறாது பயன்படுத்திக்கொண்டு வெற்றிபெறவேண்டும் என்று கூறினார்.

திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி(தன்னாட்சி), தமிழாய்வுத்துறை, இணைப் பேராசிரியர், முனைவர் த.செல்வராசு அவர்கள், புத்தனாம்பட்டி, கனரா வங்கி, கிளை மேலாளர், திருமதி அ.கோமதி ஆகிய இருவரும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பணி வாய்ப்புகள் குறித்தும் அந்த தேர்வுகளை எழுதி வெற்றிபெற செய்ய வேண்டியது யாது என்றும் விரிவாக எடுத்துரைத்தனர். வினா விடை முறையில் மாணவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு வழிகாட்டினர்.

முன்னதாக கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சோம.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். தமிழ்த்துறை உதவிபேராசிரியர் முனைவர் து.மகேஸ்வரி நன்றி கூறினார். புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

Follow US :   Faceook Instagram More Photos

Click on Image to View in Large Size
×


Get In Touch

Nehru Memorial College (Autonomous)

College Road, Puthanampatti, Trichy Dt.,

Email : nmcfrontoffice@gmail.com

+91 98429 56720

Newsletter

Annual News Letter

Follow Us