உலகம் உங்கள் கையில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா

முதல்வரின் உலகம் உங்கள் கையில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கல்லூரி 645 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு வழங்கி பேசினார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தமிழ்நாடு முதல்வரின் உலகம் உங்கள் கையில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா மூக்கன்பிள்ளை கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை வைத்தார். முசிறி 1 எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நேரு நினைவு கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முதலமைச்சரின் உலகம் உங்கள் கையில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 645 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களுக்காக கொண்டுவந்த பல்வேறுநலத்திட்டங்களை எடுத்து கூறினார் . குறிப்பாக நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மேலும் அரசு தற்போது செயல்படுத்திய மக்கள் நல திட்டங்களை பற்றியும், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை பற்றியும், பஞ்சப்பூரில் அமைய விருக்கும் ஐடி கம்பெனி பற்றியும், சிப்காட் நிறுவனம் திருச்சியில் அமைய இருக்கிறது என்றார். விழாவில் கல்லூரி பொருளாளர் சூர்யா, கல்லூரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் தமிழ்மணி, கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் கிட்டப்பா; முசிறி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணை தலைவர் ரமேஷ் மற்றும் மாணவர்கள் பேராசிரியர் கள் கலந்துகொண்டனர்.

Follow US For More Photos :   Faceook Instagram

Click on Image to View in Large Size
×


Get In Touch

Nehru Memorial College (Autonomous)

College Road, Puthanampatti, Trichy Dt.,

Email : nmcfrontoffice@gmail.com

+91 98429 56720

Newsletter

Annual News Letter

Follow Us