புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் பொங்கல் விழா
நேரு நினைவுக் கல்லூரி சுயநிதிப் பிரிவு சார்பில் 09.01.2026, வெள்ளிக்கிழமை அன்று பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து காலை 10 மணி அளவில் பொங்கல் வைத்தனர். பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் ஆவாரம் பூ, கூழைப்பூ, செங்கரும்பு ,மஞ்சள் கொத்து வைத்து சர்க்கரைப்பொங்கல் படையலிட்டுச் சூரிய வழிபாடு நடத்தி பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரித் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். தமிழரின் பெருமை பேசும் பொங்கல் விழா, மாணவர்கள் எத்தனையோ நவீனத்தைக் கடைபிடித்தாலும் தமிழருக்கென்று உரித்தான பாரம்பரியத்தை மறந்து விடக்கூடாது என்று எடுத்துரைத்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் சிறப்புகளைக் கூறி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து கல்லூரிச் செயலர் பொன்.இரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வாழ்த்துரையில் தமிழர்களின் விழாக்களையும், வழிபாட்டு முறைகளும், குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் அவர்களும் துணை முதல்வர் முனைவர் குல.தி.தமிழ்மணி அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திருமதி மாலா பாலசுப்பிரமணியன், ஷியாமளா ரவிச்சந்திரன், கல்லூரிச் செயலர் அவர்களின் தவப்புதல்வர்கள் திரு. விபுகிருஷ்ணன் மற்றும் மகாஸ்வேதா அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கயிறு இழுத்தல், உரி அடித்தல், இசை நாற்காலி, மற்றும் கோலப்போட்டிகள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வணிகவியல் துறை இயக்குநர் முனைவர் இரா. மதிவாணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி. பிரபாகரன், மற்றும் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் த. பிரகாஷ் அவர்களும் தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர் .
Nehru Memorial College (Autonomous)
College Road, Puthanampatti, Trichy Dt.,
Email : nmcfrontoffice@gmail.com
+91 98429 56720