நேரு நினைவுக் கல்லூரி சுயநிதிப்பிரிவில் 18.3. 2026 புதன் கிழமை கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக்க்கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ஆண்டறிக்கை வாசித்தார்.
கல்லூரித் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் பல்வேறு தளங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைக்கூறி தலைமையுரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து கல்லூரிச்செயலர் பொன்.இரவிச்சந்திரன் அவர்கள் பல்கலைக்கழகத்தர வரிசைப்பட்டியலில் இடம்பெற வேண்டுமாயின் கடுமையாகப் படிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரிக்குழு உறுப்பினர்கள் திருமதி.மாலாபாலசுப்பிரமணியன், திருமதி.சியாமளா ரவிச்சந்திரன் , கல்லூரிப்பொருளாளர் பா.சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் அவர்கள், கலந்துகொண்டு நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் கல்லூரி ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினர் டாக்டர் அ.சங்கரன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மதராஸ் கால்நடை மருத்துவ கல்லூரியில் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் மாணவர்கள் வெற்றியாளராகத் திகழ வேண்டுமெனில் நமக்குப் பின்னால் பேசுவதை செவிமடுக்கக் கூடாது. சரியோ தவறோ கூச்சமில்லாது மேடையேறிப் பேசுவதை மேற்கொள்ள வேண்டும். படிக்கின்ற காலத்தில் மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் நல்ல இணக்கமான நட்புறவில் இருக்க வேண்டும். மாணவர்கள் ஒழுக்கத்தோடு தங்களது குறிக்கோள்களை அடைய பாடுபட வேண்டும் என்றும் தன்னம்பிக்கை ஒருபோதும் மனிதனை கைவிடாது என்பதனையும் எடுத்துரைத்தார். திரு செல்வக்குமார் ரோட்டரி செயலர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கல்லூரியில் தேர்வில் துறைவாரியாக வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப்பிடித்த இளங்கலை,அறிவியல், முதுகலை,அறிவியல் மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக வணிகவியல் துறை இயக்குனர் முனைவர். இரா.மதிவாணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறைத்தலைவர் சி.பிரபாகரன் மற்றும் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் T.பிரகாஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். விழாவில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டமாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
Follow US For More Photos : Faceook Instagram More Photos from drive
Nehru Memorial College (Autonomous)
College Road, Puthanampatti, Trichy Dt.,
Email : nmcfrontoffice@gmail.com
+91 98429 56720