புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரி தமிழாய்வுத் துறையில் தமிழர்களின் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தமிழாய்வுத் துறை சார்பாக மூக்கப்பிள்ளைக்கலை அரங்கத்தில் 02-03-2026 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் தமிழர்களின் பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது. விழாவில் கல்லூரித் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். உரையில் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை தற்காலத்தில் மக்களிடையே கொண்டு செல்வது குறித்தும், மாணவர்கள் அன்றாடம் தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது குறித்தும் நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்வை பேணி காக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். கல்லூரிச் செயலர் பொன். ரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வாழ்த்துரையில் தற்காலத்தில் இன்றியமையாததும் தவிர்க்க முடியாததும் தமிழர்களின் பாரம்பரிய உணவு திகழ்கிறது. இதுபோன்ற விழாக்கள் மாணவர்களிடையே உணவுப்பழக்க வழக்கத்தின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். கல்லூரித் துணை முதல்வர் முனைவர் குல. தி. தமிழ்மணி அவர்கள், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சி சுந்தரம் அவர்களும் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை தமிழ்த்துறைப் பொறுப்பாளர் முனைவர் சி.பிரபாகரன் வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் அ.சசிகலாதேவி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியைத்தமிழ்த்துறை மாணவர்கள் கமலஸ்ரீ,ரஞ்சன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.நிகழ்ச்சியில் கம்பு ,சோளம் ,கேழ்வரகு ,சாமை ,குதிரைவாலி , கருப்பு கவுனி திணை வகைகள் ,பயிர் வகைகள் சிறு தானிய வகைகள் ,கீரை வகைகள் காய் வகைகள் ,மற்றும் பழங்கள் இவற்றில் செய்யப்பட்ட உணவுப்பண்டங்கள் தமிழாய்வுத்துறை மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பாரம்பரிய உணவு பண்டங்களை பார்வையிட்டு சிறப்பு விருந்தினர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் 700 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.
Follow US For More Photos : Faceook Instagram For More Photos
Nehru Memorial College (Autonomous)
College Road, Puthanampatti, Trichy Dt.,
Email : nmcfrontoffice@gmail.com
+91 98429 56720