திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் மகளிர் தின விழா கல்லூரி வளாகத்தில் மூக்கப்பிள்ளை கலையரங்கத்தில் 11.03.2026 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
விழாவினை குத்து விளக்கேற்றி திருமதி. மாலா பாலசுப்பிரமணியன் அவர்கள், திருமதி. சியாமளா ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி வைத்தனர்.
கல்லூரித் தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். கல்லூரிச் செயலர் உயர்திரு பொன்.இரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி பொருளாளர் பா.சூர்யா அவர்கள், டாக்டர்.ஹம்ருத்தா சூர்யா அவர்கள், கல்லூரிப் பொறுப்பு முதல்வர் முனைவர்.பெ.நீலநாராயணன் அவர்கள் மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆ.மீனாட்சிசுந்தரம்; ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் மதுரை மாவட்டம், கடம்பவனம் ரிசார்ட்ஸ் மற்றும் பாரம்பரிய மையம், நிர்வாக இயக்குநர், திருமதி. சித்ரா கணபதி அவர்கள் சிறப்பு அழைப்பாளர் ரோட்ரி சங்கத்தின் மாவட்ட தொடர்புத் தலைவர் சுவn.வளர்மதி குமரேசன்; அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். சிறப்பு விருந்தினர்கள் சமுதாயத்திற்கு சேவையாற்றியதற்குப் பெண் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்;டார்கள். கல்லூரி அளவில்; போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரி தலைவர் அவர் உரையில் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி ‘பெருமைமிக்க முன்னாள் மாணவர்’ விருதுபெற்ற மாணவிகளைப் பாராட்டிப் பேசினார். கல்லூரி செயலர் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பெண்களுக்கான நீதி பெறவும் நாம் துணை நிற்கவேண்டும் என்றார். திருமதி, சித்ரா கணபதி அவர்கள் உரையில் எல்லாக் காலத்திலும் பெண் மற்றவர்களைப் பாதுகாப்பவளாக இருந்திருக்கிறாள். எல்லோரையும் பேணுபவளாக இருப்பதால் பெண் எனப்பட்டாள், நம் தமிழர் மரபில் சங்கங்காலம் சமநிலை சமுதாயமாக இருந்தது. இடைக்காலத்தில் தான் பெண் பின்னடைவைச் சந்தித்தாள். ஓவ்வொரு பெண்ணும் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருக்கின்றாள். பெண்கள் முதலில் தங்களுக்குத் தாங்களே மரியாதைதரப் பழகவேண்டும். அனைவரையும் மதிக்கவேண்டும். எல்லாத் துறைகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. வழிகாட்டுவதற்கும் பெண்களுக்கான முன்னோடிகள் மிகுந்துள்ளனர். இவற்றை அறிந்து பெண்கள் முன்னேறவேண்டும். தமிழ்த்தாய் நம்மைப் பெற்ற அன்னையைப் போல் அதனால் தமிழ்ப்பற்றை பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கவேண்டும் என்றார். சுவn.வளர்மதி குமரேசன் அவர்கள் உரையில் இந்த விழாவில் விருதுபெறும் முன்னாள் சாதனை மாணவிகளைப் பார்த்து அதுபோன்று நாமும் உயர்ந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்கிற உணர்வோடு நீங்கள் பயிலவேண்டும். அந்த நோக்கத்திற்காகத்தான் இது போன்ற விழாக்களை நிர்வாகத்தினர் நடத்துகின்றனர் என்றார்.
விழாவில் பல்வேறு நிறுவனங்களில் உயர்பதவி வகிக்கும் முன்னாள் மாணவியர்; P.மணிமலாவிவேக், ளு.சாந்தினி, புலவர் பு.பார்கவி, முனைவர் யு.கவிதா, முனைவர் மு.வனஜா, முனைவர் சு.அருள்பிரியா, நந்தினி கோவிந்தசாமி, திருமதி ஏ.விமலா, னு.சியாமளா, மு.சுபா, திருமதி கீதா சரவணன், திருமதி பு.கீதா, திருமதி மு.பிரவீணா “பெருமைமிக்க முன்னாள் மாணவர் விருது” கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர், அவர்கள் தங்கள் கல்லூரி அனுபவங்களையும் தங்கள் உயர்வுக்குக் கல்லூரி உதவிய விதத்தினை எடுத்துரைத்தனர்.
முன்னதாக கல்லூரித் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் மு.மேரி அன்புமதி அவர்கள் வரவேற்புரையாற்றினார். வணிகவியல் துறைப் பேராசிரியர் மற்றும் விழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்..இ.சுமதி அவர்கள் நன்றி உரையாற்றினார். சுயநிதிப்பிரிவு கணிப்பொறியியல் உதவிப் பேராசிரியர் வை.பிரியா, வேதியியல் துறை பேராசிரியர் சு.சண்முகப்பிரியா அவர்கள் விழாவை ஒருங்கிணைத்தார்கள். புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Nehru Memorial College (Autonomous)
College Road, Puthanampatti, Trichy Dt.,
Email : nmcfrontoffice@gmail.com
+91 98429 56720