புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி, ஆராய்ச்சி மற்றும் முதுநிலை கணினி அறிவியல் துறை சார்பாக மேக கணினியின் பயன்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கு 31.01.2015 அன்று நடைபெற்றது. உலக மென்பொருள் வரலாற்றில் மேக கணினி தனித்தடம் பதித்து வருகிறது என்று சென்னை சாஃப்ட் ஸ்குயர் மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் திரு. ஆண்டி கிரி கூறினார்.
அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசிய போது, மேக கணினி, கணினி மென்பொருள் வரலாற்றில் புதிய வரவு என்றும் இந்த மென்பொருள் வாடிக்கையாளர் உறவு நிறுவனத்திற்கு (CRM) பெரிதும் பயனுள்ளதாக உள்ளது என்றும், இதனால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கிறது என்று ஆண்டி கிரி கூறினார். மேலும், இணையதளத்தின் பயன்பாடு அதிகமாகி வருகிற காரணத்தால், தகவல்களை தனித்தனி கணினியில் சேமித்து வைக்காமல், இணையதளத்தில் சேமித்து வைப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவர் கூகுள் பயன்பாடு, சேல்ஸ் போர்ஸ்.காம் போன்ற மென்பொருள், மேக கணினி போன்ற மென்பொருள் நிறுவனங்களை எடுத்துக்காட்டாக கூறினார். முன்னதாக முதுநிலை கணினி அறிவியல் மாணவ,மாணவிகள் பங்கு பெற்ற நேர்முகத் தேர்வில் செல்வன். லோகநாதன், செல்வன். சக்தியராஜ் மற்றும் செல்வி. வித்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இக்கருதரக்கம் மற்றும் வேலை வாய்ப்பு முகாமிற்கு முதல்வர் முனைவர் த. ஜெயப்பிரகாசம் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் பொன். பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கணினி துறைத் தலைவர் பேராசிரியர் மு. முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருமதி. ரா. அகிலா, திருமதி. வை. பிரியா மற்றும் திருமதி. கு. பொன்வேல் அழகுலக்ஷ்மி மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. ரா. ஜெயராமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.