புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் தமிழிலக்கிய மாணவர்களின் ஆளுமைப் பண்புகள் மேம்பாட்டுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரிக் கூட்டத்தில் இன்று 7.9.2016 புதன் கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தி. ஜெயப் பிரகாசம் தலைமை உரையாற்றினார் . நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக குழுத் தலைவர் பொறியாளர் பொன். பாலசுப்பிரமணியன் அவர்களும் கல்லூரி நிர்வாக குழு செயலர் பொன்.இரவிச்சந்திரன் அவர்களும் வாழ்த்தி பேசினார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாளர் ஆட்சிக் குழு உறுப்பினர், முனைவர் இரா. செல்வநாயகம் அவர்களும் வி.இராமன் அவர்களும் மாலைஐந்து மணிவரை தொடர்ந்து கருத்துரை வழங்கினார்கள். இறுதியில் சுயநிதி பிரிவுத் தமிழ்த்துறைத் தலைவர் து.மகேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சியைத் தமிழ்ப் பேராசிரியர் என்.ஆர்.சக்திவேல் தொகுத்து வழங்கினார். விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ரொக்க பரிசுகள் வழங்கிப் பாராட்ப்பெற்றனர்.