கற்றல் இனிது - உரையரங்கம் - 04.07.2018

04.07.2018 புதன் கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு தமிழ்த்துறை - இலக்கிய வட்டத்தின் சார்பில் உரையரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.இரா.பொன்பெரியசாமி தலைமை உரை நிகழ்த்தினார். கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் முனைவர் சோம.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர், திரு.வி.க.அரசு கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மு.அருணகிரி கற்றல் இனிது என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். மாணவர்கள் கற்பதை ஒரு சுமையாகக் கருதாமல் அனுபவமாகக் கருதி விரும்பிக் கற்றால் கற்றல் இனிதாகும் என்றார். கல்லூரிப் பருவத்தில் கற்றலை இனிமையாக்கிக் கொள்வதற்கான பல்வேறு வழிமுறைகளை எடுத்துரைத்தார். இலக்கியவட்டத் தலைவர் கணிதவியல் துறை மாணவி கு.மதுபாலா நன்றி கூறினார்.


Click here for more photos