நெகிழி இல்லா புத்தனாம்பட்டி' திட்டம் - 17.07.2018

நேரு நினைவுக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், ‘நெகிழி இல்லா புத்தனாம்பட்டி' திட்டம் துவக்கப்பட்டு, மாணவர்கள், பொதுமக்கள், கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் கேரி பேக்குக்கு மாற்றாக, துணி பைகள், இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட, எளிதில் மக்கும் தன்மையுள்ள பைகள், பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நேரு நினைவுக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக 17.07.2018 செவ்வாய்கிழமை மாலை 3.30 மணி முதல் 6 மணி வரை நெகிழி பயன்பாடு ஒழிப்பு விழிப்புனர்வு கல்லூரி விடுதிகளில் நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுமார் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மகாத்மா காந்தி நூற்றாண்டு விடுதி மற்றும் மேட்டு நில விடுதிகளில் உள்ள நெகிழிகளை அப்புறபடுத்தினர். மேலும் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் உள்ள நெகிழிகளையும் அகற்றினர். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத இடமாக கல்லூரியை மாற்ற, மாணவர்கள் உறுதி ஏற்றனர். இந்த நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் திரு.ஆ.ஜெகதீசன், முனைவர். சி.பிரபாகரன், திரு.த.பிரகாஷ், ஆகியோர். மேற்பார்வையில் நடைப் பெற்றது.


Click here for more photos