புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் புத்தியோர் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தென் கோரிய குடியரசின் கவுன்சில் ஜென்ரல் கியாங்சூ கிம் தலைமை விருந்தினராக கலந்துகொண்டனர். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வணிகவியல் முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் வி.கே . பூமிநாதன் சிறப்புரையாற்றினார். கல்லூரிப்பெருந்தலைவர் பேராசிரியர் மூ. பொன்னம்பலம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தலைவர் பொன். பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் டீ. ஜெய்பிரகாசம் வரவேற்புரை ஆற்றினார். மண்ணச்சநல்லூர் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரியின் தாளாளர் அ. லோகநாதன் வாழ்த்துரை வழங்கினார். தென் கொரிய குடியரசின் கவன்சில் ஜென்ரல் கியாங்சூ கிம் பேசுகையில் "இந்தியாவுக்கும் தென் கொரியாவுக்கு பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் வேகமாக வளர்ந்து வரும் நாடுகள். நம் மக்களிடையே அதிக கல்வி தாக்கம் உண்டு. இருவரும் உலக அமைதியைவிரும்புகின்றவர்கள். என்று சென்னையில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென் கொரியர் வசிகிரகள். எங்கள் நாட்டின் சாம்சங், ஹாண்டாய், எல்.ஜி. போன்ற முன்னனி நிறுவனங்கள் இங்கே கொடிகட்டிப்பறக்கிறது. நம்முடைய அறிவும் ஆற்றலும் உலக வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்". கல்லூரி தலைவர் பொன். பாலசுப்ரமணியன் மற்றும் முதல்வர் டீ. ஜெய்பிரகாசம் சிறப்பாக உரையாற்றினார். சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரியின் தாளாளர் அ. லோகநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக பெற்றோர் சங்கத் தலைவர் இராமதாஸ் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். கல்லூரி டின். அ. பிரபாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் என்.ஆர். சக்திவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதலாமாண்டு ஆங்கிலத்துறை மனைவி தரிசிக்க நன்றியுரை வழங்கினார்.