திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி, வணிகவியல் துறை சார்பாக பல்வேறு கலைக் கல்லூரிக்கான திறன் வெளிப்பாடு போட்டிகள் நடைபெற்றது. இதில் பல கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் வி.செல்வராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் டி.ஜெயபிரகாசம் அவர்கள் தலமைத் தாங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முகமைக் குழு தலைவர் பொறியாளர் பொன். பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் Dr.D.ராஜகுமாரி அவர்கள் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், வாழ்த்துரையும் வழங்கினார். போட்டியில் திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும், காவேரி மகளிர் மாணவிகள் இரண்டாம் பரிசையும் வென்றனர். வணிகவியல் துறைத்தலைவி (சுயநிதி ப் பிரிவு ) முனைவர் ஐ. சுமதி அவர்கள் இவ்விழாவினை ஒருங்கிணைத்து செயல்படுத்தினார். மாணவர் ஜெ. கபில் II.B.Com(CA) நன்றியுரை வழங்கினார்.