Consumer Protection Day

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா நேற்று கொண்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் பொறியாளர் பொன். பாலசுப்ரமணியன் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் T.ஜெயப்ரகாசம் அவர்கள் தலைமை உரையாற்றினார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ஐ.சுமதி அவர்கள் வரவேப்புரை வழங்கினார். இவ்விழாவின் நுகர்வோர் பாதுகாப்பு பற்றி தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு.எம். முத்துசாமி (வழக்கறிஞர் ) மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு. ஜி. அழகேசன் (வழக்கறிஞர் ) ஆகியோர் மாணவர்களிடையே நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தை அணுக வேண்டிய முறைகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு ஆகியன பற்றி விரிவான தகவல்களை எடுத்துரைத்தார். இவ்விழாவையொட்டி மாணவர்களிடையே பல்வேறு திறன் வெளிப்பாடு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்தனர். இவ்விழாவானது நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.