மாநில அளவிலான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு தொடக்க விழா, திருச்சி, புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் டிசம்பர் 12 ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
தொடக்க விழாவில் மேதகு டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பட்ட, ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றியவர் மற்றும் அறிவியல் எழுத்தாளர் டாக்டர் நெல்லை சு. முத்து, கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றவுள்ளார். நிறைவு விழாவில் வீ.தன்ராஜ் ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ்தவான் விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் கலந்து கொண்டு சிறப்பித்து பரிசளிக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்து அறிவியல் படைப்புகள், மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை தர உள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம் கோளரங்கத்தில் (planatorium) இருந்து நடமாடும் அறிவியல் பேருந்து, வானியல் நிகழ்வு நடைபெறுகின்றது. அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியில் மாணவர்களின் அறிவியல் தொடர்பான பேட்டி, மாதிரிகளின் செயல் முறை, அடிப்படை அறிவியல் தத்துவம் பற்றிய நேரடி நிகழ்வு நடைபெறுகின்றது.
அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச்சென்று காட்டி நம் குழந்தைகளுக்கு அடிப்படை அறிவியல் (basic science) தத்துவத்தை நேரடி காட்சி மூலம் சொல்லி கொடுப்போம். அது பின்னாளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவும்.
Science Exhibition Invitation |
|
CEO Order, Perabalur |
|
Letter to Colleges |
|
Letter to Schools |
|
News Clipping |