நேரு நினைவுக் கல்லூரி ஐ.சி.டி அரங்கத்தில் 13.07.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு தமிழ்த்துறை - இலக்கிய வட்டத்தின் சார்பில் உரையரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.இரா.பொன்பெரியசாமி தலைமை உரை நிகழ்த்தினார். கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் முனைவர் சோம.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். திருச்சிராப்பள்ளி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கி.மைதிலி அவர்கள் ‘அன்பும் அமைதியும்’ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். மாணவர்கள் கற்கும்போது தம் துறைசார்ந்த பாடங்களோடு நற்பண்புகளையும் கற்றுக்கொள்ளவேண்டும். தனி மனித வாழ்வில் ஒவ்வொருவரிடம் அன்பு செலுத்துதல் உலக அமைதிக்கு அடிப்பையாகும் என்றார். அக்குபங்சர் சிறந்த மருத்துவ முறையாகும் அதனை முறையாகப் பின்பற்றினால் பல்வேறு நோய்களிலிலும் விடுதலை பெறலாம் என்று கூறினார். சில அக்குபங்சர் சிகிச்சை முறைகளையும் செய்துகாட்டி விளக்கினார். இலக்கிய வட்டத்தினைச் சேர்ந்த விலங்கியல்துறை மாணவி செ.வனிதா நன்றி கூறினார்.