நேரு நினைவுக்கல்லூரியில் படிப்புடன், மாணவமாணவிகளுக்கு படிக்கும் போதே வேலைவாய்ப்புக்குரிய சிறப்பு பயற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் வகையில் ஹைகிளாஸ் செல்போன் பயிற்சி 14.07.2018 மற்றும் 15.07.2018 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சியினை கல்லூரியின் தலைவர் மற்றும் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் இணைந்து துவங்கிவைத்தனர். கல்லூரி தலைவர் திரு.பொன். பாலசுப்ரமணியம் பேசுகையில் அனைத்து மாணவ மாணவிகளும் இப்பயிற்சியின் மூலம் நன்கு பயிற்சி பெற்று அவரவர் கைபேசியினை அவரவராக சரிசெய்ய கற்று கொள்ள வேண்டும் என்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர்.அ. ரா.பொன்பெரியசாமி அவர்கள் பேசுகையில் வன்பொருளும் மென்பொருளும் இணைந்து பணியாற்றினால் தான் கைப்பேசி சிறப்பாக வேலைச் செய்யும் என்று கூறினார். நியூடெக்னாலஜி மேனஜர் திரு. கார்த்திக் பேசுகையில் கைப்பேசியில் உள்ள மின்சாதன பொருட்களான மின்தடை, மின்தேக்கி, கம்பிச்சுருள், தொகுப்புச்சுற்று, டிராண்சிஸ்டர், மதர்போர்டு வேலை செய்யும் விதத்தை தெளிவாக விளக்கி கூறினார். முன்னதாக இந்த பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர் இயற்பியல்துறை உதவிபேராசிரியர்.இ;ரமேஷ் அனைவரையும் வரவேற்றார் .