நமது கல்லூரியில் 2018-2019 ஆம் கல்வியாண்டிற்கான ரோட்ராக்ட் சங்க புதிய தலைவர், செயலர் பதவியேற்பு விழா 28.8.2018 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவியர் தலைவர் சித்ரா அவர்கள் வரவேற்புரையாற்றினார். திருச்சி சக்தி ரோட்ராக்ட் சங்கத் தலைவர் திருமதி வள்ளி மீனாட்சி சுந்தரம் அவர்கள் மாணவர் குழுவை பதவி பிரமானம் செய்து வைத்தார். 2018-2019 ஆம் ஆண்டு ரோட்ராக்ட் சங்க குழு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவ செயலர் திட்ட அறிக்கை வாசித்தார். கல்லூரித் தலைவர் திரு.பொன். பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துறை வழங்கினார். மேலும் கல்லூரி முதல்வர் பொறுப்பாளர் திருமதி. மணிமேகலை அவர்கள் மாணவர்களுக்கான ஊக்கவுரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சுவn. விக்ராந்த் கார்மேகம் னுசுஊஊ அவர்கள் தனது சிறப்புரையில் மாணவிகளுக்கு சங்கத்தின் செயல் திட்டங்கள் மற்றும் நோக்கம் பற்றியும் விளக்கினார். மாணவர் தலைவர் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவடைந்தது.