கல்லூரியில் 21.6.18 அன்று காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 200 மாணவ மாணவிகள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். கல்லூரி சேர்மன் பேராசிரியர் திரு. மூ.பொன்னம்பலம் மற்றும் திருமதி பொன்.சிவனேஸ்வரி அவர்கள் குத்து விளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்தனர். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு. ரமேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.இரா.பொன்பெரியசாமி அவர்கள் தலைமையுரையில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் பதஞ்சலி விவசாயிகள் சேவை அமைப்பின் தலைவர் திரு.சோ.சிவசண்முகம் அவர்கள் யோகாசனப்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், சர்க்கரைநோய், புற்றுநோய், மாரடைப்பு,சிறுநீரகக் கோளாறு போன்றவை வராமல் தடுப்பதற்கான பயிற்சிகளையும் அளித்தார். அடுத்த தலைமுறையாகிய நமது குழந்தைகளை நல்லவர்களாகவும், தேசபற்றுள்ளவர்களாகவும் வளர்ப்பது பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வா.ரா. விஜயலெட்சுமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.